குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!

0
230
#image_title

குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் அற்புத லேகியம் தயார் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்து தினமும் 1 உருண்டை சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்பு வலுப்பெறும். தாய்ப்பால் சீராக சுரக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 50 கிராம்

*கொத்தமல்லி விதை – 10 கிராம்

*கடுகு – 25 கிராம்

*அதிமதுரம் – 25 கிராம்

*திப்பிலி – 10 கிராம்

*வால் மிளகு -10 கிராம்

*சுக்கு – 25 கிராம்

*சித்தரத்தை – 25 கிராம்

*வாய்விளங்கம் – 25 கிராம்

*மா விளங்கபட்டை – 5

*மஞ்சள் தூள் – 25 கிராம்

*கருஞ்சீரகம் – 25 கிராம்

*சாளியல் – 50 கிராம்

*ஜாதிக்காய் – 1

*மாசிக்காய் – 1

*கடுக்காய் – 1

*சதக்குப்பை – 25 கிராம்

*ஏலக்காய் – 10 கிராம்

*இலவங்க பட்டை – 5

*சீரகம் – 10 கிராம்

*சிறுநாகப்பூ – 25 கிராம்

*அக்கரா – 10 கிராம்

*நறுக்கு மூலம் – 25

*சாரண வேர் – 25 கிராம்

*கருப்பு மிளகு – 25 கிராம்

*கருப்பட்டி – சிறிதளவு

*நல்லெண்ணெய் – சிறிதளவு

*நெய் – சிறிதளவு

*பெருங்காயத் தூள் -15 கிராம்

*தேன் – சிறிதளவு

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை வாங்கி ஒரு தாம்பூலத்தில் கொட்டி 3 முதல் 4 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.

அவை நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் காயவைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து இவற்றை நன்கு ஆற விடவும்.

பிறகு ஒரு உரலில் ஆற வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும். உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பொருட்களை ஜல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அதில் 1/2 கிலோ சுத்தமான கருப்பட்டியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும். பாகு கொதிக்க ஆரமித்ததும் அதில் 4 தேக்கரண்டி அளவு அரைத்து வைத்துள்ள லேகிய பவுடரை சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.

இவ்வாறு செய்யும் பொழுது லேகியம் கெட்டியாக ஆரம்பிக்கும். அந்த தருணத்தில் சுத்தமான நெய் 50 மில்லி, நல்லெண்ணெய் 50 மில்லி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் லேகியம் எண்ணெய் பிரியத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு லேகியத்தை நன்கு ஆற விட்டு அதில் 100 மில்லி தூயத் தேன் சேர்த்து கிளறி விடவும்.
இந்த லேகியத்தை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழந்தை பெற்ற பெண்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
அதேபோல் எலும்புகள் உறுதிபட இவை பெரிதும் உதவும்.

Previous articleஅருமையான கேரளா தேங்காய் தோசை – எப்படி செய்வது?
Next articleகேரளா ஸ்டைல் “மட்டன் கீ ரைஸ்” – சுவையாக செய்வது எப்படி?