கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வாரி வழங்குவதில் ராகிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருப்பதால் இந்த ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த ராகி செரிமானம்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவுகிறது.
தேவையான பொருட்கள்:
ராகி – 100 கிராம்
வெல்லம் – தேவையான அளவு
(அல்லது)
நாட்டு சர்க்கரை
செய்முறை:-
1.முந்தின நாள் காலையில் 100 கிராம் ராகி எடுத்து அவற்றை 3 முதல் 4 முறை கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
2.பிறகு அன்றிரவு இரவு ஒரு காட்டன் துணி கொண்டு அவற்றை முளை கட்ட வேண்டும்.
3.அடுத்த நாள் காலையில் முளைகட்டிய ராகியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
4.அதற்கு முன்னதாக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
5.பிறகு அரைத்து வைத்துள்ள ராகி பாலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி அவற்றில் கொதிக்க வைத்துள்ள நாட்டு சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி அருந்த வேண்டும்.