பலாப்பழ கொட்டையில் ஒரு முறை இப்படி அல்வா செய்து பாருங்க! டேஸ்ட் நாவை விட்டு போகாது!

0
30
#image_title

பலாப்பழ கொட்டையில் ஒரு முறை இப்படி அல்வா செய்து பாருங்க! டேஸ்ட் நாவை விட்டு போகாது!

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் மிகவும் சுவையான பழம் பலா.இந்த பழத்தை விரும்பி உண்ணும் நாம் அதன் விதைகளின் மகிமை தெரியாமல் அவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறோம். இந்த பலாப்பழ விதைகளை கொண்டு குழம்பு,கூட்டு,வடை போன்ற பல உணவுகள் உள்ளது.ஆனால் இதில் அல்வா செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது.

தேவையான பொருட்கள்:-

*பலாப்பழ கொட்டை – 20 முதல் 25

* வெல்லம் – 1 குண்டு

* நெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

1.பலா விதைகளை 2 அல்லது 3 முறை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் குக்கர் வைத்து அதில் பலா விதைகளை போட்டு அவை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

3.பலா விதைகள் நன்கு வேக வேண்டும்.அதனால் 3 விசில் வந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

4.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் சேர்த்து பாகு நிலைக்கு வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

5.குக்கரில் உள்ள பலா விதைகளை தோல் உரித்து அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட வேண்டும்.

6.அதில் காய்ச்சி வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

7.அடுப்பில் கடாய் வைத்து அரைத்து வைத்துள்ள பலா பேஸ்டை சேர்த்து அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி நெய் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

8.பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வரும் வரை கிளற வேண்டும்.இவற்றை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.

பலா விதையின் நன்மை:

*பலாப்பழ விதையில் வைட்டமின் ஏ நிறைந்துருப்பதால் பார்வை திறனை மேம்பட அவை பெரிதும் உதவுகிறது.மாலைக்கண்,கண்புரை,மாகுலர் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.

*இந்த விதையில் உள்ள அதிகளவு புரத சத்து நம் உடலின் தசைகளை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

*இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதினால் விரைவில் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

*இந்த விதையில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியிருப்பதால் இவற்றை உண்ணும் போது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகிறது.

*பலா விதைகளில் இருக்கின்ற வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்து முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

*இதில் உள்ள நார்ச்சத்து,கரோட்டினாய்டுகள்,பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இருக்கின்ற கொலட்ஸ்ரால் அளவை குறைக்க உதவுகிறது.