தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
242

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதோடு நீலகிரி ,கோவை, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

நாளைய தினம் கோயமுத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் நீலகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

Previous articleநேரடி விமானப் போக்குவரத்துத்திற்கு அனுமதி வழங்கிய கனடா அரசு! மகிழ்ச்சியில் இந்தியா!
Next articleவசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here