ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jayachithra

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

Jayachithra

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து சற்றே கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தது. கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கமானது குறைந்து வருகிறது.

அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கின்றது.

அதனை தொடர்ந்து குஜராத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகவும் உற்சாகமான உள்ளனர்.

மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு சில மாநிலங்களில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனை அடுத்து தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.