12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!!

0
70

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தனித்தேர்வர்கள் மற்றும் விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த நிலையில் கடந்த மே மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மேலும் மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதிப்பின் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு செய்யப் பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் தங்கள் மதிப்பெண் சான்றிதழை இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது மேலும், தனித்தேர்வர்கள் மற்றும் விருப்பத் தேர்வு எழுத விரும்புவோர் அனைவரும் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மாணவர்கள் இன்று முதல் வருகின்ற 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்ற தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

author avatar
Jayachithra