சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

0
349
#image_title

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.

இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும்.

இந்த ஜூஸ் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.பெரும்பாலானோருக்கு எளிதில் வரக்கூடிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சீனி அவரை(கொத்தவரை) பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*கொத்தவரங்காய் – 10

*எலுமிச்சம் பழம் – பாதி

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கொத்தவரங்காய் 10 எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.அடுத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.அரைக்கும் பொழுது நுரையாக கொத்தவரங்காய் தண்ணீருடன் கலந்து நுரையாக வரும்.

பின்னர் இந்த கொத்தவரங்காய் சாற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அதில் அரை எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும்.

அடுத்து அதில் தேவையான அளவு துயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

Previous articleஉங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ் !
Next articleநம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!