கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

0
114
#image_title

கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் சந்தோசம் அல்லது கஷ்ட காலத்தில் தங்களது உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியாமல் கண்ணீரால் வெளிப்படுத்தி விடுகின்றனர்.

ஒருசிலர் சிறு விஷயங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே அழுது விடுவார்கள். இதனால் அழுமூஞ்சி… எதற்கும் அழுது விடுவாயா? என்று சிலர் திட்டக் கூட செய்வார்கள். அழுவதால் கஷ்டங்கள் தான் அதிகரிக்கும்… மன அழுத்தம் அதிகமாகும் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே கண்ணீர் விட்டு அழுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் தான் கிடைக்கும்.

அழுவதால் எப்படி நன்மைகள் கிடைக்கும்…

இன்பமோ… துன்பமோ… கண்ணீர் விட்டு அழும்போது கண்களில் உள்ள அழுக்கு, தூசு அனைத்தும் முழுமையாக வெளியேறும். இதனால் கண் உறுத்தல், எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதால் கண் பார்வை தெளிவாகும். கண்களில் வறட்சி நீங்கும்.

கஷ்டத்தில் இருக்கும் பொழுது சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதால் மன அழுத்தம் முழுமையாக நீங்கும்.

ஒரு சிலருக்கு அழுகும் பொழுது மூக்கில் இருந்து சளி வெளியேறும். இவை நல்லது தான். காரணம் சளியுடன் மூக்கில் அடைபட்டு கிடந்த தூசு, அழுக்கு அனைத்தும் அதனுடன் வெளியேறி சுவாசிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்கும்.