ஆப்ரேஷனே இல்லாமல் சிறுநீரக கற்களை கரைய வைக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!
சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு முழுமையாக குணமாக இந்த எளிய வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மிளகு
2)சீரகம்
3)வாழைத்தண்டு
செய்முறை:-
ஒரு துண்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளரிக்காய்
2)ஆப்பிள்
3)புதினா
4)இஞ்சி
5)மஞ்சள்
6)உப்பு
செய்முறை:-
ஒரு வெள்ளரிக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதேபோல் ஒரு ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1/4 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து நறுக்கிய வெள்ளரி மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு அலசி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் நறுக்கிய ஆப்பிள்,வெள்ளரி துண்டுகளை போடவும்.பின்னர் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது புதினா இலை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சிறுநீரகத்தில் படிந்து கிடந்த கற்கள் பனி கட்டிபோல் கரைந்து சிறுநீர் வழியாக வந்துவிடும்.