உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!

0
268
#image_title

உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!

மலச்சிக்கல் பிரச்சனையை உங்களில் பலர் சந்தித்து வருகின்றனர்.அதிக மன அழுத்தம் மலச்சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வு சொல்கிறது.

மலச்சிக்கல் அறிகுறிகள்:-

*முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு
*வயிறு உப்பசம்
*வறண்ட மலம்
*மலம் கழிப்பதில் சிரமம்

மலச்சிக்கலை போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள்
2)ஆமணக்கு எண்ணெய்

செய்முறை:-

ஒரு முழு ஆப்பிளை தோல் நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நாறுக்கிக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.

இந்த ஆப்பிள் சாற்றில் 3 அல்லது 5 துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கலுக்கு சில நிமிடங்களில் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூசணி விதை
2)வேர்க்கடலை

செய்முறை:-

ஒரு ஸ்பூன் பூசணி விதை மற்றும் ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை வாணலியில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வறுத்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலக் குடலில் அடைபட்டு கிடக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.பூசணி மற்றும் வேர்க்கடலை மெக்னீசியம் சத்துக்கள் கொண்ட பொருட்கள் ஆகும்.

மெக்னீசியம் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படும் என்பதினால் மெக்னீசியம் சத்துக்கள் கொண்ட பொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.