DMK TVK AMMK: அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சி தொண்டர்கள் வரை அயராது உழைத்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளிடமும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட தினகரன் தனியாக கட்சி தொடங்கிய நிலையில், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். சசிகலாவின் அரசியல் முடிவு என்னவென்றே தெரியாத நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.
இவ்வாறு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்துள்ள சமயத்தில் NDA கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து விலகிய தினகரன் மற்றும் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவென்று அரசியல் களம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் பொங்கலுக்கு முன் இவர்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளது என, தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் கூறினார். தினகரன் மற்றும் ஓபிஎஸ்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த திமுகவிற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் இந்த பேச்சுவார்த்தையில் வேகமேடுத்துள்ள திமுக, இவர்கள் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதாக கூறி கூட்டணி ஒப்புதல் வாங்கியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இபிஎஸ்யின் தலைமையை இவர்கள் இருவரும் ஏற்காததாலும், திமுக- தவெகவிற்கு இடையே தான் போட்டி என்று கூறியதாலும் கடைசி நேரத்தில் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவர்கள் இருவரின் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் தென் மாவட்டங்களின் வாக்குகளை கவரலாம் என நினைத்த செங்கோட்டையனுக்கு இந்த செய்தி அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.