திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு !!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு !!

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர்.அதில் 87 ஆயிரம் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளது. இதில் சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் மிதமான இடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் … Read more

குரூப் – 2 உள்பட 7 துறைகளின் நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!! TNPSC

குரூப் - 2 உள்பட 7 துறைகளின் நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!! TNPSC

தமிழகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட அரசு துறை பணிகளுக்கான குரூப் 2 உள்ளிட்ட 7 துறைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட்டதோடு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குரூப் 2 பிரிவில் 1,334 காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடைபெற்றது. தேர்வில் 14 … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த 6 மாவட்டங்கள்  மற்றும் வட மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,வேலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகயும் , வெற்பசலனம்  பொருத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸாக  பதிவாக கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருப்பத்தூர் (வடபுதுப்பட்டு) , கடலூர்(வேப்பூர்),ஆகிய பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும்,கடலூர் (சிதம்பரம்), திருவண்ணாமலை (கலசபாக்கம்) பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும் ,ராணிப்பேட்டை (காவேரிப்பாக்கம்),ஈரோடு (கோபிசெட்டிபாளையம்) கரூர் (மைலம்பட்டி),திருப்பத்தூர் (வாணியம்பாடி) ஆகிய பகுதிகளில் ஏழு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் மத்திய வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால், தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சேலம் மாவட்டத்தில்,சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்றோர்களை அடித்து விரட்டியதால் தெருவுக்கு வந்த தம்பதியினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் முனியன்-ரஞ்சிதம் ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் . இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தம்பதியினருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி விட்டு ஒரு சிறிய வீட்டில் அவர்களின் இறுதி நாட்களை கழித்து வந்தனர் . சொத்தை எழுதிக் கொடுத்ததன் பின்பு , தனது … Read more

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

“ஒரே நாடு – ஒரே ரேஷன்” இன்று முதல் அமல்!!

"ஒரே நாடு - ஒரே ரேஷன்" இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் … Read more

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவர் ராமதாஸ் கூறும் தீர்வு

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் விதமாக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,610 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் (வயது 94). இவருக்கு கடந்த மாதம் 27ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் … Read more