கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

வேளச்சேரியில், வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் அதிரடியாக பிடித்தனர். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சென்னை: வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய், திருடப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் வேளச்சேரி காவல் … Read more

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிற சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து … Read more

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தை நிர்வகிக்க போதுமான காவலர்கள் இல்லை என்பதால் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை … Read more

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான 335 சென்செக்ஸ் புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகளில் குறைந்தது. பங்குச்சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்தது இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மையுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் பெரிதும் … Read more

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,வேலூர்,விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளின் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையுடன், மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி … Read more

ராமன் கோயில் பூமி பூஜைக்கு: பிரதமர் வருகை

ராமன் கோயில் பூமி பூஜைக்கு: பிரதமர் வருகை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் அயோத்தி வருகை சுதந்திரதினம் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில எல்லைப்பகுதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்தோ- நேபாள எல்லை காவல் படை உள்ளூர் நுண்ணறிவு பிரிவு மற்றும் நுண்ணறிவு முகாம்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  பேருந்து மற்றும் … Read more

ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை?தமிழக அரசு அதிரடி!!

ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை?தமிழக அரசு அதிரடி!!

கொரோனாத் தொற்றின் வீரியத்தால் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருந்தார்.ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்ட்டது.இதேபோன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் … Read more

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது? கோவை மேட்டுப்பாளையத்தில் நெல்லிமலை காட்டில் வளர்ந்து வந்த யானை தாடையில் காயம்பட்டு இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நெல்லிமலை காட்டில் யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததை கண்டு உள்ளனர். சுற்றியும் பல யானைகள் இருந்ததால் அவர்களால் பக்கத்தில் செல்ல முடியாமல் கவனித்து மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த யானைகள் விலகிச் சென்றதும் அருகில் சென்று … Read more

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’!

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! 'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு'!

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன்.’தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’.   இந்தச் சம்பவம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுள்ளது. கோலாலம்பூரில் தோட்ட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியை இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளி மிரட்டியுள்ளார். அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார்.   இதனை தொலைவிலிருந்தே கவனித்த ஒரு தமிழ் இளைஞன் அங்கு வந்து நடந்ததை கேட்டுள்ளார் இந்தோனேஷியா தொழிலாளி எதுவும் கூறாத நிலையில் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர் பளார் பளார் என்று நான்கு அறை … Read more

சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும், முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் … Read more