சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

0
66

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,வேலூர்,விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளின் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையுடன், மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்ளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொருத்தவரை அடுக்கு 48 மணி நேரத்திற்கு மேகமூட்டமாக இருக்கும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4ம் தேதி வரை, மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனக் கூறியுள்ளது. ஆகஸ்டு 2 முதல் 4ம் தேதி வரை, அரபிக்கடலில் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியது.

கடலோர கேரளா, கர்நாடகா லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.கடலோர மகாராஷ்டிரா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என கூறியுள்ளது.

அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K