சொத்தைப்பல் வலியுடன் போராடி வருகிறீர்களா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ!

0
63
#image_title

சொத்தைப்பல் வலியுடன் போராடி வருகிறீர்களா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ!

ஆரோக்கியமற்ற உணவு,அதிகப்படியான இனிப்பு உண்பது போன்றவற்றால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும்.

இதனால் வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தேவையான பொருட்கள்:-

கொய்யா இலை – 10

மிளகு விதை – 1/2 தேக்கரண்டி

கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

கல் உப்பு – சிறிதளவு

செய்முறை:-

கொய்யா இலை 10 எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதன் பின் ஒரு உரலில் நறுக்கி வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து மய்ய அரைக்கவும்.உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கலாம்.இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

பிறகு 1/2 தேக்கரண்டி எடுத்து உரலில் போட்டு இடித்து கொள்ளவும்.மிளகிற்கு பதில் மிளகு பொடி பயன்படுத்த கூடாது.மிளகு விதைகளை தான் பயன்படுத்த வேண்டும்.

இவற்றை இடித்த பின் அரைத்து வைத்துள்ள கொய்யா இலை விழுதில் சேர்க்கவும்.

பின்னர் கஸ்தூரி மஞ்சள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.அதையடுத்து கல் உப்பு சிறிதளவு நன்கு கலக்கவும்.இதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பிறகு சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைத்து வைக்கவும்.

இந்த ரெமிடியை அடிக்கடி தயார் செய்து சொத்தை பற்களில் வைத்து வந்தோம் என்றால் வலி,வீக்கம்,குடைச்சல் போன்றவை ஏற்படாது.சொத்தை பல் புழுக்களுக்கும் விரைவில் அழிந்து விடும்.