மாணவர்களே ஜாக்கிரதை! கல்வியமைச்சர் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

0
292

திருச்சி கிழக்கு பகுதிகளை சார்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்வி தந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு, போன்ற நலத்திட்ட உதவிகள் 60,22,510 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது பள்ளிகளுக்கு மாணவர்கள் கைபேசி கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்யப்படும் மாணவர்களின் கவனம் சிதறுவதை நிறுத்தும் விதத்தில் பள்ளிகளில் முதல் 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

அதன்பிறகுதான் வகுப்புக்கள் ஆரம்பமாகும் 11, 12, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி ஆரம்பித்தவுடன் தன்னார்வ அமைப்புகள் காவல்துறையை கொண்டு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாம் கொடுத்த அழுத்தம் காரணமாக, தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

எந்தவிதமான சட்ட போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கும்படி நேரடியாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தால் அதன் காரணமாக தான் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது என்று கூறியிருக்கிறார் அன்பில் மகேஷ்.

முதலமைச்சர் வழங்கும் முதல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்றுக்கொள்கிறது. அதேபோலதான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் நியாயமான குரல் அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார்.

தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீருடை, புத்தகம், உள்ளிட்டவற்றை பள்ளியிலேயே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டாகிவிட்டது என கூறியிருக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களை தக்க வைக்கும் விதத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து தரப்படும். இந்த வருடத்தில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் இல்லம் தேடி கல்வியின் தேவை இருக்கிறது இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறோம் 2 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நடைபெறும் போதுதான் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Previous articleஉலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!
Next articleநீங்க இந்த ராசியா! அப்படின்னா இன்னிக்கு உங்களுக்கு விசேஷம் தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here