சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது அவர்களின் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.ஆனால் தினை மாவு வைத்து செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை அனைவருக்கும் உடல் நலத்திற்கு ஏற்ற சிறுதானிய பண்டமாக இருக்கிறது.சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கொழுக்கட்டையை உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:-
*தினை மாவு – 1 கப்
*வெல்லம் – 1 கப்
*தேங்காய்
*சுக்கு பொடி – 1/4 தேக்கரண்டி
*உப்பு – 1 சிட்டிகை
*ஏலக்காய் – 3
*முந்திரி பருப்பு
*நெய் – தேவையான அளவு
செய்முறை:-
அடுப்பில் வாணலி வைத்து அதில் ஒரு கப் தினை மாவை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்னர் அதில் 3/4 கப் வெல்லம் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு,1/4 தேக்கரண்டி சுக்கு பொடி,தேங்காய் பற்கள் 10 துண்டுகள்,2 அல்லது 3 தேக்கரண்டி நெய் மற்றும் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிண்டவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீர் தேவோயான அளவு சேர்த்து,கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளவும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து கையில் பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் இட்லி தட்டில் காட்டன் துணி வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.அதில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு ஆவியில் வேக விடவும்.