வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!!

0
26
#image_title

வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!!

நம்மில் பெரும்பாலானோருக்கு ரவை என்ற பெயரைக் கேட்டாளே வெறுப்பாக இருக்கும்.காரணம் அதில் செய்யப்படும் உப்புமா தான்.ஆனால் ரவையில் கேசரி,லட்டு என்ற இனிப்பு வகைகள் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.அந்த வகையில் சுவையான வாயில் வைத்ததும் கரையும் ரவா லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*ரவை – 1/2 கப்

*நெய் – 100 மில்லி

*முந்திரி பருப்பு – 15

*உலர் திராட்சை – 15

*சர்க்கரை – 1/2 கப்

*ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி(இடித்தது)

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 15 முந்திரி மற்றும் 15 உலர் திராட்சை சேர்த்து வறுத்தெடுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் ரவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சையை ரவையில் கலந்து வறுத்து இறக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் சர்க்கரை பாகு ஓரளவிற்கு பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இப்பொழுது ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையில் இடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.அடுத்து சர்க்கரை பாகு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து லட்டு மாதிரி பிடித்தி கொள்ளவும்.