தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் 61 நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.   தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் … Read more

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்   கடந்த 07.03.2022 அன்று தாளமுத்துநகர் அருகேயுள்ள பாலதண்டாயுத நகர் பகுதியில், குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டிற்கு வந்த மனைவி மாரிசெல்வி (19) என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்தும், அதை தடுக்க வந்த மனைவியின் தாயாரான சண்முகம் மனைவி மாரியம்மாள் என்பவரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கொலையுண்ட மாரிசெல்வியின் கணவரான தூத்துக்குடி அண்ணாநகர் … Read more

நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் திருவிழாக்கள் நடக்கும்போது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை இந்த இரு மாவட்டங்களிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது நாளை மார்ச் 3ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி! தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்தினர். பாஜக கொடியுடனும் மற்றும் காவி கொடியுடனும் பலாயிரம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியை போலீசார் உடனடியாக தடுத்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் … Read more

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் விசாரணையின் முடிவில் ரஜினியின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்துமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவருடைய வழக்கறிஞர் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கமிஷன், ரஜினிகாந்தை நேரில் அழைத்து விசாரணை செய்ய சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு … Read more

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்! தூத்துக்குடியை சேர்ந்த சாம்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் அவரின் பைக்கை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ​இதில் கைதான் சந்தோஷ்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமுற்று சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்க்க சென்ற சூப்பர் … Read more

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையத்தில் … Read more