இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!   கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ். இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று … Read more

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் … Read more

அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

அரசு பேருந்திற்கு வழிகொடுக்காமல் எட்டு கிலோ மீட்டர் தூரம் இரண்டு பைக்கில் சென்ற ஐந்து இளைஞர்கள் அட்டகாசம்: இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் – பத்தனம்திட்டாவிற்கு செயின் சர்வீஸ் நடத்தும் அரசு பேருந்து நேற்று மதியம் கொல்லத்திலிருந்து பயணிகளுடன் பத்தனம்திட்டாவிற்கு புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் இரு பைக்கு களில் 5 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பேருந்துக்கு வழிகொடுக்காமல் மெதுவாகவும் சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more