இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

0
44

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

 

கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். மறுநாள் பார்க்கும் பொழுது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது யாருக்கும் எதுவும்  தெரியவில்லை.

 

இதையடுத்து இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றிருக்கலாம் என்று யோசித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நடத்துனர் கனிராஜ் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். கனிராஜ் அவர்களின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது இராஜபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 22 வயதான மகன் சக்தி கணேஷ் என்பவர் கனிராஜ் அவர்களின் இருசக்கர வாகனத்தை திருடினார் என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து தலைமறைவாக இருந்த சக்தி கணேஷ் என்பவரை தேடி கைது செய்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முடிவில் சக்தி கணேஷ் இருசகக்ர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் மதுரையில் இரண்டு இடங்களில் வாகனத்திருட்டில் ஈடுபட்ட உண்மையும் தெரிய வந்தது.

 

இந்த மூன்று இருசக்கர வாகனங்களில் ஒரு வாகனத்தை மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் ராஜா என்பவரிடம் சக்தி கணேஷ் விற்பனை செய்துள்ளார்.

 

ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ராஜா அதிமுக கட்சியின் முன்னாள் பேரூர்ட்சி தலைவர். அது மட்டுமில்லாமல்  தற்போது அங்குள்ள பேரூராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராகவும்(அதிமுக) ராஜா உள்ளார்.

 

சட்டத்தின் முன் சமம் என்ற வாசகத்திற்கு ஏற்ப காவல்துறையினர் செயல்பட்டு கவுன்சிலர் ராஜா அவர்களையும் இருசக்கர வாகனத்தை திருடிய சக்திகணேஷ் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.