அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவில் முதல்வர்  வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது.  ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் உள்ள அமைச்சர்கள்: எஸ் பி வேலுமணி  தங்கமணி  திண்டுக்கல் சீனிவாசன்  சிவி சண்முகம்  ஆர் காமராஜ் ஜேசிடி பிரபாகர்  மனோஜ் பாண்டியன்  மோகன்  ஆர் கோபாலகிருஷ்ணன் மாணிக்கம் மேலும் கடந்த 2017ஆம் … Read more

வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா,விவசாயிகள் விலை உறுதி மற்றும்  பண்ணை சேவைகள் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவையே 3 மசோதாக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் … Read more

அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிக்கையை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ளனர். அந்த  அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: “அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் … Read more

கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி (செப்டம்பர் 18) அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். சசிகலாவின் விடுதலை தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இந்த பேரவையில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் … Read more

அதிமுக தலைமையகத்தில் கூடவுள்ள கட்சி கூட்டம்! முடிவெடுக்க உள்ள அதிமுக!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று  அதிமுக கட்சியின் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ,அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய பொதுக்குழு கூட்டம் இந்த ஆண்டு … Read more

அதிமுகவில் இணைவதாக திமுகவின் முன்னாள் அமைச்சர் கழகத்திற்கு கொடுத்த ஷாக்!!

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், திமுகவின் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர் ஒருவர் பங்கேற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட திமுகவின் … Read more

அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டம்! மரு.ராமதாஸின் அறிக்கையால் கூட்டணியில் விரிசல்?

ஆளுங்கட்சியாகவும், தனது கூட்டணிக் கட்சியாகவும் இருந்து வரும் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் தமிழ்நாடு, புதுச்சேரி சிறப்புப் பொதுக்குழு இணைய வழியாக செப்டம்பர் 6ஆம் தேதி நடந்தது. சுமார் 11.30 மணிக்குத் துவங்கி மதியம் 2.45 மணியளவில் முடிந்த கூட்டத்தில் ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.   அதில் ராமதாஸ் இறுதியில் பேசியதாவது, “நாம சாலைமறியல் போராட்டம் நடத்திக் கிடைத்த 20% எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் … Read more

“ஹெச்.ராஜா எப்பவுமே இப்படித்தான்” கூட்டணித் தலைமையில் பாஜக பற்றி செல்லூர் ராஜு விளாசல்

பாஜக டில்லியில் ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவால் தான் சவாரி செய்ய முடியும் என செல்லூர் ராஜு கூட்டணித் தலைமை குறித்து தெரிவித்துள்ளார்.    அண்மையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் போது அவர் கூறியதாவது, “நீட் விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக இரட்டை வேடம் போட்டு விட்டு ஆளும் அரசை குறை கூறி வருகிறது.   தினமும் தன்னுடைய பெயர் ஊடகங்களில் வெளிவரவேண்டும் என்பதற்காகவே … Read more

கோஷ்டி அரசியலால் திமுக பக்கம் நகரும் அதிமுகவின் முக்கிய பிரபலம்! குழப்பத்தில் அதிமுக தலைமை

Edappadi Palanisamy and O Panneerselvam-News4 Tamil Online Tamil News

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரண்டும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் அடுத்து யார் முதல்வர் என்ற போட்டி பூதாகரமாக கிளம்பியுள்ளது. தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் இணைந்து சமரச அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட போட்டியானது ஓய்ந்தபாடில்லை. அதேபோல திமுகவிற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் தலைவலியை … Read more

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

சமீப நாட்களாக அதிமுக கட்சியில், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், ஓபிஎஸ் யாரை நியமிப்பது போன்ற கருத்துக்கள் வியூகங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இது குறித்து தற்போது அதிமுக தலைமைப் பொறுப்புகள் பற்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமைப் பொறுப்பினை அறிவிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதில், “நாம் அனைவரும் … Read more