வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

0
195

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா,விவசாயிகள் விலை உறுதி மற்றும்  பண்ணை சேவைகள் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவையே 3 மசோதாக்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் வணிக செயல்பாடுகளை பாதிக்காது.குறைந்த ஆதார விலையில் நடைபெற்றுவரும் நெல் கொள்முதல் போன்றவை புதிய சட்டங்களால் பாதிக்காது.விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையை பெறுவது உறுதி செய்யப்படும்.இந்த மசோதாவால் விவசாயிகள் கொள்முதல்,  செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இம்மசோதாவை பற்றி மக்களவையில் பேசிய அதிமுக எம்பியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் “வேளாண் சட்டங்கள் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.இதன் மூலம் விவசாயிகள் இடைத்தரகர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.அத்துடன் நாட்டில் எங்கும் தங்கள் தயாரிப்புகளை விற்க முடியும்.” என்று ஆதரவு தெரிவித்து பேசினார்.

மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது.முன்பு நடைபெற்ற விவாதத்தின்போது வேளாண் மசோதாவுக்கு அதிமுக மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர் பாலசுப்ரமணியம் விவசாயிகளுக்கு முக்கியமாக குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பதுக்கல்,கள்ளச் சந்தை உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை மாநில அரசுகளுக்கு ஏற்படும் என்றும், இதன்மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

மேலும் வெளிநாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் இந்த மசோதாவின் மூலம் பயன்பெறும் என்றும் எஸ்ஆர் பாலசுப்ரமணியம் கடுமையாக குற்றம் சாட்டினார். இவ்வாறு வேளாண்மை மசோதாக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால் மாநிலங்களவையில் பேசிய அக்கட்சியின் எம்.பி  எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது அரசியல் களத்தில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Previous articleஎனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!ஓபிஎஸ் அதிரடி முடிவு!
Next articleபாராளுமன்ற மேலவையில் நடந்த விபரீதம்!பாராளுமன்றத்தின் அழகை குலைத்த ஆறு எம்பிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here