முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை திருச்சிக்கு வருகை தந்தார். இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த பணிகள் ஆரம்பம், புதிய பணிகளுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். சிமெண்ட் ஆலைகளுக்கு … Read more

2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம்! முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் இதோ!

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தின் மூலமாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் பள்ளிக்கு செல்லவிருக்கிறார். அங்கே புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டவும் அடிக்கல் நாட்டவிருக்கிறார். அத்துடன் மாணவர்களின் நலன் கருதி அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஸ்டீம் திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் எறையூருக்கு வருகை தரும் முதலமைச்சர், அங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலையின் புதிய அலகையும் … Read more

தமிழக அரசுக்கு பிராமணர் சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை! நிறைவேற்றுவாரா முதல்வர்?

தமிழக பிராமணர் சங்க 13 வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் ராமநாதன் 2021- 22 காண வருட அறிக்கையை படித்தார். மாநில பொருளாளர் ஜெயராமன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். … Read more

மிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவி குழு கடன்கள்! தயாராகிறது பட்டியல்!

தமிழகத்தில் கடன் தள்ளுபடி பெண்களுக்கு உதவி தொகை என்று பல்வேறு சமூகநீதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பமானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக் இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது இதன் மூலமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதே போல திமுகவின் தேர்தல் அறிக்கையில் … Read more

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பங்கேற்கவர் இந்த நிகழ்ச்சி தாமதமானது அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பார்க்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டசபை உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் பார்த்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையின் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு … Read more

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது இந்த பொது தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியதாக இருக்கின்ற திமுக, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அதிலும் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக வரையில் அந்தந்த கட்சி தலைமைகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை … Read more

விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

சமூக நீதி, சமத்துவம் என்றால் முதலில் மக்களின் மனதில் நிற்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கையில் எடுத்த அந்த ஆயுதத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இருந்தாலும் அதே ஆயுதத்தை ஒரு சில கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு சமூகநீதி, சமத்துவம் என தெரிவித்துக் கொண்டு பல விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றன. குறிப்பாக திருமாவளவன் போன்றோர் சமூகநீதி, சமத்துவம் பற்றி பேசும் போது அதை காண்பவர்களுக்கு சிரிப்பு … Read more

இது போன்ற கோமாளித்தனத்தை இதுவரையில் பார்த்ததில்லை! பால் விலை உயர்வு தொடர்பாக அண்ணாமலை விலாசல்!

தமிழக அரசு உயர்த்தி இருக்கின்ற சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. கட்டுமான பொருட்களின் விலை தொடங்கி சொத்து வரி குடிநீர், மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை என்று அனைத்து கட்டணமும் அதிகரித்துவிட்டது … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெகுவான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணியளவில் கடலூரில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். முதலில் கடலூர் … Read more