முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த எட்டு பேருக்கு சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர். மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் … Read more

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

ருய்லீ என்ற  நகரை சீனா முடக்கியுள்ளது இந்த ருய்லீ நகர் சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. சிறிய அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் … Read more

கொரோனா தடுப்பு மருந்து எப்போதுதான் தயாராகும்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுகான் நகரில் உருவான கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீனா வெளியிட்ட தகவலின்படி வருகின்ற நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளது. மேலும் சீனா நான்கு வித தடுப்பு மருந்துகளை பரிசோதனை செய்து வருகிறது நவம்பர் அல்லது டிசம்பரில் தடுப்பு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் … Read more

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து  பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, … Read more

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஏற்கெனவே … Read more

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் … Read more

மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களில்  நான்கில் ஒரு பங்கு அமெரிக்கர்தான் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஐம்பது லட்சத்தை நெருங்கியது.  அதேபோன்று பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை நெருங்கி வருகிறது.

மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் … Read more

டிசம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய குழு

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசின் பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி … Read more

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (65,88,448 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (45,66,726 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (42,39,763 பேர்) உள்ளன.