அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை … Read more

மீண்டும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளா முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,48,29,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,58,92,670 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,03,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 66,325 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,033,234 … Read more

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 6.12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 9 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் ரூ.200ம், கிராமப் புறங்களில் ரூ.100ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நகரப் பகுதிகளில் … Read more

2-ம் கட்ட கொரோனா அலை: எதிர்கொள்ள அரசு தயார்..! அமைச்சர் விஜயபாஸ்கர்

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் (CT scan) கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை (Post Covid Centre) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் முப்பரிமாண முறையில் … Read more

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா … Read more

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு!

பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் … Read more

கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். … Read more

துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://twitter.com/drashwathcn/status/1307251065658552320?s=20 … Read more

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று!!

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோகநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more