இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது. ஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . … Read more

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் … Read more

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு – மத்திய அரசுக்கு கடிதம்!

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு - மத்திய அரசுக்கு கடிதம்!

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மும்மொழிக் கொள்கை ஏற்க கூடியது அல்ல என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கல்வி கொள்கை சார்பாக நியமிக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தகவலை கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றும், பட்டப் படிப்புக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது தமிழகத்திற்கு சாத்தியமல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்ட இருக்கும் நிலையில் , பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த ஆறு மாதமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதனால்  மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க இயலாமல் உள்ள நிலையில், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் … Read more

கே.பி.அன்பழகன் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்! அறிவிப்பு என்ன தெரியுமா?

கே.பி.அன்பழகன் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்! அறிவிப்பு என்ன தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்  சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை” என்று அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த முடிவை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் நேரடியாக தெரிவிக்கும்படி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக, … Read more

தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

UGC என்பது அனைவருக்கும் சமமான உயர்தர கல்வியை வழங்குவதற்காக அரசால்  அமைக்கப்பட்டதாகும். இந்த அமைப்பு தற்போது தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய கருத்துக்களை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும், கல்வியாளர்களும் என அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு கொண்டு வருகின்றனர். தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதற்கு கடைசி நாளாக அக்டோபர் மாதம் 18-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமாக அக்டோபர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்ற புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் ஏழாம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். கடைசி நாளுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள்  அபராதம் செலுத்தி  விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதையும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. … Read more

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று … Read more

யுஜிசி இன் புதிய அறிவிப்பு – போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ரிலீஸ்!

யுஜிசி இன் புதிய அறிவிப்பு - போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ரிலீஸ்!

UGC எனும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அளவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த யுஜிசி அமைப்பு அனைவருக்கும் சமமான தரமான உயர் கல்வியை வழங்குவதற்காக அமைக்கப்பட்டதாகும். யுஜிசி அமைப்பு, நடப்பு ஆண்டில் நடத்திய ஆய்வில்,  இந்தியாவிலுள்ள 24 பல்கலைக்கழகங்கள் போலியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு பட்டம் அளிக்கும் அதிகாரமே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதில் மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா … Read more

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தோச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சேர்க்கை … Read more