கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களும் வருகின்ற திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை, மக்களிடம் – “இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்க்கு, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட இந்த … Read more

தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்ட கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்தார். இந்தத் தொடரில் 89 ரன்கள் எடுத்த வோக்ஸ், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டார், இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார், மேலும் முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர் முகமது நபியிடமிருந்து 20 புள்ளிகள் தொலைவில் உள்ளார். இதற்கிடையில், ஜானி பேர்ஸ்டோ, பேட்ஸுடன் ஒரு வெற்றிகரமான தொடரின் பின்னர் முதல் பத்து பட்டியலில் நுழைந்தார், மூன்று ஒருநாள் … Read more

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த … Read more

போரிஸ் ஜான்சன் உத்தரவால் இங்கிலாந்து மக்கள் உற்சாகம்

இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி  முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா … Read more

ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இடம்பெறாத நிலையில்  வரும் வெள்ளிக்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய தாவித் மலன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹம் நகரில் கத்திக் குத்துச் சம்பந்தமான தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 27 வயது என்றும் அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்லி ஓக்  பகுதியில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திக் குத்துச் சம்பவங்கள் சுமார் இரண்டு மணிநேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்ததாகப் புலனாய்வு அதிகாரி கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் … Read more

பென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?

ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடருக்கு உலக அளவில் மிகப்பெரிய  ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது தந்தையை கவனிக்க வசதியாக கடந்த மாதத்தில் நியூசிலாந்துக்கு … Read more

சானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்

கொரோனா வைரஸ் காரணமாக எந்த வித போட்டியும் மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை ஷைனிங் செய்வதற்காக எச்சில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்து ஷைனிங் தன்மையை உடனேயே இழந்து விடுவதால் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கடந்த மாதம் இங்கிலாந்தில் … Read more

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் ஒய்வு

இயன் பெல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இவர் அந்த அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 7,725 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5,416 ரன்களும் அடித்தார். டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் 46 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களும், 35 அரைசதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த ஐந்து வருடமாக இங்கிலாந்து அணியில்  இடம் கிடைக்காததால் கவுன்ட்டி போட்டியிலும் மட்டும் விளையாடி … Read more