அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!

அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!

திருச்சி காவிரி- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது போன்ற பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதை போலாகிவிடும் என ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறது. காவேரி கொள்ளிடம் ஆறுகள் திருச்சி முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்றிணைகின்றன. இடையில் முக்கொம்பு முதல் கல்லணை வரையில் தீவு பகுதியாக இருக்கிறது கம்பரசன் … Read more

கிடா முட்டு சண்டை! நீதிபதிகள் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கிடா முட்டு சண்டை! நீதிபதிகள் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கம்பம் பகுதியைச் சார்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தேனி மாவட்டம் கம்பம், அணிஷ் தோப்பு, மணிகட்டி ஆலமரம், பகுதியில் எதிர்வரும் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கிடா முட்டு சண்டை நடத்த கம்பம் நகர் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடந்த 8ஆம் தேதி மனு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் … Read more

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயம் இதை அனைவரும் செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த அதிரடி உத்தரவு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயம் இதை அனைவரும் செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த அதிரடி உத்தரவு!

நாட்டில் கடந்த 2 வார காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது, அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 552 பேருக்கு நோய்த்தொற்று செய்யபட்டுள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை நிச்சயமாக பின்பற்ற வேண்டுமென பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் … Read more

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அதனை கண்டித்து நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு சட்டசபையில் வெளியானது. ஆனாலும் அந்த சமயத்திலேயே இது தற்காலிகமானதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

திருச்சி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியை தாக்கி விட்டதாக என் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். கிராம உதவியாளர் அவர்களுக்கும் , எனக்கும், இதற்கு முன்னரே கோவில் திருவிழாவின்போது பிரச்னை உண்டானது. அந்த முன்விரோதம் காரணமாக, என் மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து … Read more

தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!

தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் குடிப்பழக்கம் ஒரு மிகப்பெரிய தீய பழக்கமாக கருதப்பட்ட காலம் தற்சமயம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் மது அருந்துவது ஒரு அத்தியாவசிய பழக்கமாக மாறி விட்டது. அந்த பழக்கம் இல்லாதவர்கள் பெரிய அளவில் யாராலும் மதிக்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமிழக மக்களுக்கு மது பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி விட்டார்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் … Read more

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். அந்தவகையில், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சார்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில் தடுப்பூசிகளை 18 வயதுக்கும் கீழே இருப்பவர்களுக்கு செலுத்துவது குறித்து இதுவரையில் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் … Read more

பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

உசிலம்பட்டியில் இருக்கின்ற துர்க்கையம்மன் கோவிலில் பெண் பூசாரிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உசிலம்பட்டி நல்ல தேவன் பட்டி சார்ந்தவர் பின்னி அக்காள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். என்னுடைய தந்தை பின்னதேவர் நீல நாயக்கன்பட்டியில் இருக்கின்ற ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோவிலில் பூசாரியாக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் அவருடைய மறைவிற்கு பின்னர் அவருடைய வாரிசான நான் அந்த கோவிலில் … Read more

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த இயலாமல் மருத் மருத்துவ படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். இதனை அடுத்து தனியார் … Read more

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள … Read more