தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!

0
154

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் குடிப்பழக்கம் ஒரு மிகப்பெரிய தீய பழக்கமாக கருதப்பட்ட காலம் தற்சமயம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் மது அருந்துவது ஒரு அத்தியாவசிய பழக்கமாக மாறி விட்டது. அந்த பழக்கம் இல்லாதவர்கள் பெரிய அளவில் யாராலும் மதிக்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமிழக மக்களுக்கு மது பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி விட்டார்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழித்து விடுவோம் என்று தெரிவித்தவர்கள் ஆட்சிக்கு வந்து மதுவை கட்டுப்படுத்திய வரலாறே கிடையாது.

தொடக்க காலத்தில் கள்ளச்சாராயம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பலர் மாண்டு போயினர் இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து மது விற்பனையை செய்து வருகிறது. இது எம்ஜிஆர் காலம் தொட்டே இருந்து வருகிறது இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்வு இல்லை நாட்டின் பல மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் நடந்து வரும் ஒரு நிகழ்வு தான் என்பது நிதர்சனம்.

அதேநேரம் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தற்சமயம் மதுப் பழக்கத்தில் வரும் போதை பற்றாக்குறை காரணமாக, தற்சமயம் கஞ்சா போன்ற மிகத் தீய பழக்கங்களில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இந்த கஞ்சா விவகாரம் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொடி கட்டி பறக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாநில அரசுகள் மிகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் தற்சமயம் இந்த விவகாரம் தமிழகத்தில் தலைதூக்கி இருப்பதுதான் வருத்தமளிக்கிறது.

இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத விதத்தில் கடந்த மூன்று வருட காலமாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை என்பது அதிகமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த விற்பனையை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆளும் சமீபகாலமாக இந்த கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு மோதல் உண்டாகி கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கொலை சம்பவம், வாணியம்பாடி அருகே ஒரு கொலை சம்பவம் இந்த கஞ்சா விற்பனையில் காரணமாக நடந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.