அதிமுகவின் உண்மையான ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் அதிரடி!
சேலத்தில் நடந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரையின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதைத்தான் பொதுக்குழு ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் தான் தற்சமயம் அதிமுகவில் வழி நடத்தி வருகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more