காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதலமைச்சர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகருக்கு அருகே ரங்கிரி பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இதற்கிடையே ஸ்ரீ நகரின் புறநகர்ப் பகுதியாக இருந்து வரும் பந்த்சவுக் அருகில் இருக்கின்ற ஜுவன் என்ற பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தை … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதிக்க தொடங்கிய சூழ்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வந்தத காரணத்தால், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்சமயம் வீரிய மிக்க நோய்த்தொற்று வகைகளில் ஒன்றான ஒமைக்ரான் பரவத் தொடங்கி இருக்கின்றது. ஆகவே இதனையடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக … Read more

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராணுவ அதிகாரி!

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இதுதொடர்பாக கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்து விட்டு உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்து வந்து அங்கு இருக்கக்கூடிய நிலவரம் என்ன என்பதை கவனித்து விட்டு உடனடியாக அதிகாரிகளுக்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.இது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது அதோடு தேசிய அளவில் … Read more

விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ராணுவ விமான விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியானதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் நோக்கி விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் … Read more

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மூதாட்டி! உடனடியாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறங்கி விடப்பட்டார் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியங்குடியைச் சார்ந்தவர் செவ்வமேரி இவர் மீன் விற்பனை செய்து வருகின்றார், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மீன் விற்பனை செய்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் நாகர்கோவிலிலிருந்து குடிமனை செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்போது மீன் விற்று விட்டு வருகிறாயா இறங்கு, இறங்கு, நாறும் … Read more

மாநிலத்தில் மீண்டும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவியதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் அளவை பொருத்து ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டு வந்தன, ஆனாலும் ஊரடங்கு உத்தரவு இந்த நாள் வரையில் பல்வேறு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சென்ற மே மாதத்தில் தினசரி நோய்த்தொற்று அளவு முப்பத்தி ஆறு ஆயிரம் என்ற சூழ்நிலையில் இருந்து வந்தது, ஆனால் தற்சமயம் 720 என்ற … Read more

சென்னையில் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் மினி பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருக்கின்ற சுமார் 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், அப்போது தெரிவிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் மினி பேருந்துகளில் பயணிகளின் பயன்பாடு குறைந்து நிதி இழப்பு உண்டானதால் மீதம் இருக்கின்ற 144 மினி பேருந்துகள் … Read more

மழை வெள்ள பாதிப்பு! சென்னை புறநகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 15 தினங்களாக தொடர்ந்து விட்டு,விட்டு பலத்த மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதீத நல்ல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த மழைநீர் பாதிப்பு முடிவடைவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 தினங்களாக மீண்டும் கனமழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் அதிகம் உண்டாகி இருக்கிறது. சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தியாகராய நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு … Read more

முடிவுக்கு வரும் ஊரடங்கு! நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!

சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதன் காரணமாக, என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பது … Read more

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழக அரசின் முதன்மை இலக்கு! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தி கேள்விப்படும்போது எல்லாம் உண்மையை சொல்லவேண்டும் என்று சொன்னால் அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அறத்தையும், பண்பாட்டையும், அதிகமாக பேசும் ஒரு சமுதாயத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த … Read more