வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை வங்காள தேசபிரதமருடன் இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது. ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன. காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வங்காள தேசத்தின் சுருக்கமான … Read more

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு, கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றி, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார். இந்த நாள் (ஜூலை 26-ந் தேதி), கார்கில் போர் வெற்றி நாள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், கார்கிலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. எந்த சூழ்நிலையில் கார்கில் போர் நடந்தது என்பதை இந்தியர்களால் மறக்க முடியாது. … Read more

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளை கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் படிப்படியாக காட்டி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உள்ளது. கொரோனா பாதிப்பால் 1,426 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புடன் 23,921-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும்  சூழலில்,  பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை … Read more

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து, “அயோத்தியில் ராமர் கோவில் பூமி … Read more

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்ஆன ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (26-ம் தேதி)  11 … Read more

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி சாம்னாவில் வெளியானது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார்.  ஆனால் சில விஷயங்களை படிப்படியாக தொடங்கி வருகிறோம். ஒரு முறை தொடங்கப்பட்டால், அது மீண்டும் மூடப்படக் கூடாது. எனவே நான் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். நீங்கள் பொருளாதாரமா, சுகாதாரமா என யோசிக்க முடியாது. இரண்டும் சமமாக கருதப்பட வேண்டும். கொரோனா பிரச்சினை உலக போர். இது ஒட்டு … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால்  பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில்  நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் … Read more

கொரோனா வைரஸ் : இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ் : இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஒரே நாளில் 72 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரி்ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் … Read more