சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ … Read more

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதே போல் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி … Read more

அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

அமீரகத்தில் தற்போது செயல்பட்டு வரும் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடு வரை மொத்தம் 1,200 கி.மீ. தொலைவு கொண்ட போக்குவரத்து பாதையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த துபாய்- புஜேரா ரெயில்வே தடத்தில் 35 பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் அந்த மலைப்பகுதியில் தொடங்கியுள்ளது. பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு மலையை குடைந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. … Read more

இந்த உறுப்பையும் பாதிக்குமா கொரோனா வைரஸ்

இந்த உறுப்பையும் பாதிக்குமா கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரிய துன்பத்திற்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும். இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளாரான முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது  துபாயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயங்களை நாம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளங்கள் மாறுபட்டதால் கடினமானதாகும். ஆகவே, பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால் அதை நிர்வகிக்க முடியாது என்பது அவ்வளவு கடினம் அல்ல. நாம் எப்படி நம்முடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்பதை சார்ந்தது. வீட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வந்ததை சிறப்பானதாக உணர்கிறோம். நமக்கு … Read more

போரிஸ் ஜான்சன் உத்தரவால் இங்கிலாந்து மக்கள் உற்சாகம்

போரிஸ் ஜான்சன் உத்தரவால் இங்கிலாந்து மக்கள் உற்சாகம்

இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி  முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.

தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்

தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்

பாப் உட்வார்ட்டிடம் டிரம்ப் பேசும் போது, டிரம்ப் உட்வார்ட்டிடம் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவில் இருந்து வெற்றி பெறுவேன் என்றும், பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டதாகவும் கூறினார். ‘நான் இந்த நாட்டுக்கு ஒரு உற்சாக வீரர். நான் எங்கள் நாட்டை நேசிக்கிறேன். மக்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை.  இந்த நாட்டையோ அல்லது உலகத்தையோ வெறித்தனமாக விரட்டப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையைக் காட்ட விரும்புகிறோம்; நாங்கள் வலிமையைக் காட்ட விரும்புகிறோம். … Read more

பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி … Read more

யுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

யுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் … Read more

ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?

ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு கருத்து தெரிவித்திருந்த ரசிகர் ஒருவர் ‘‘நீங்கள் பும்ரா போன்று சிறந்தவர் இல்லை என்று கூறினார்.  அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட் எனக்கு பும்ராவை பிடிக்கும் நீங்கள் கூறுவதை நான்  ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒப்பிட வேண்டிய தேவையில்லை. சிறந்த பந்து வீச்சாளர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்’’என பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளிப்பார் … Read more