ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்த சக்தியதான் அளிக்கிறதா?

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்த சக்தியதான் அளிக்கிறதா?

ரஷியா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் முதல் இரண்டு கட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து இருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பு … Read more

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார். … Read more

மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை வெள்ளிக்கிழமையே வெளியாகும் … Read more

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்த காலம் 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் பார்சிலோனா கிளப்பை விட்டு வெளியேற விரும்பினார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் விடுவிக்கும்படி பார்சிலோனா கிளப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை, ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்று பார்சிலோனா தரப்பில் சொல்லப்பட்டது. மெஸ்சியின் தந்தை நேரில் … Read more

இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  கூறுகையில், ‘விளையாட்டு ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது … Read more

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின்  உதவியாளர் பதவியை அசிம் சலீம் பஜ்வா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனாலும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அசிம் சலீம் பஜ்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு எதிராக வெட்கமின்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்க நான் வெட்கப்படவில்லை. எனக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளன,’’ என கூறினார்.

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

துபாய் போலீஸ் துறை சார்பில் துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் அங்குள்ள தண்டனை மற்றும் சீர்திருத்த மையத்தின் சார்பில் ஜெயில் கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு மனதளவில் அவர்கள் தன்னம்பிக்கை அடைய பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஜெயில் தண்டனை முடிந்து வீடு திரும்பும் நிலையில் தங்களுக்கு என ஒரு கைத்தொழிலை … Read more

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சுய சேவை மையங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் அரசின் ‘அனைவருக்குமான நகரம்’ கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் எளிமைப்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த … Read more

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

நைஜர் மாநிலத்தின் டுக்கு என்ற இடத்தில் வசித்து வரும் மக்களை துப்பாக்கி ஏந்திய கும்பல் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது உள்ளூர் பாதுகாப்பு படையினர் அவர்களது திட்டத்தை முறியடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் ஏற்கனவே பெண்கள் மற்றும் போலீஸ்காரர் உள்பட ஐந்து சுட்டுக்கொலை செய்திருந்தனர். இந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வைத்துள்ள … Read more

ஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்

ஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்

‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும், நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி கடந்த 14-ந்தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தது. ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் வந்தபோது புயலில் சிக்கி மாயமானது. முன்னதாக இந்த கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர … Read more