கொரோனா உருவானது எப்படி?

கொரோனா உருவானது எப்படி?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ஸ் கோவ்-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வவ்வால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன. இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என டுவிட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார். சார்ச், கோவ்-2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 … Read more

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது  கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை உயர்கல்வி அமைப்புகளை … Read more

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் ஆளுநராக பதவியேற்றவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். உர்ஜித் படேல் சமீபத்தில் ‘ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்’ எனும் நூல் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த … Read more

இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

கொரோனா எளிதில் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும். புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா … Read more

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததை காண முடிந்தது. மிக மிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலார்ட் எச்சரிக்கை குறிக்கிறது.  அதேபோல், ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை  என்றால்,  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியாக விடப்படும் அறிவுறுத்தல் ஆகும். ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை … Read more

108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 … Read more

ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம்

ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம்

ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான எம்.பி.டி.ஏ.வின் ‘மெடடோர்’ ஏவுகணை (வானில் இருந்து வானுக்கு) மற்றும் ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் பெற்றவை ஆகும். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்ட … Read more

இந்தியா வந்த ரபேல் போர் விமானம்

இந்தியா வந்த ரபேல் போர் விமானம்

ரபேல் போர் விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. பிற்பகல் 2 மணிக்கு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின. அரேபிய கடலில் கடற்படை போர்க்கப்பல் அதனை வரவேற்றன. ரபேல் வருகையால் அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அங்கு புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது. ரபேலால் விமானப்படையின் போர்த் … Read more

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் கடந்துள்ளது. தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா … Read more