நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு … Read more

உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.  உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் … Read more

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 30-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.  வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை … Read more

கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன் – சங்கக்கரா

கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன் - சங்கக்கரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்லின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறன் என்றார். மேலும் கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் … Read more

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் - கவுதம் காம்பிர்

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதில் இந்தியாவில் தற்போது பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்திய அணியில் தற்போது யார் இல்லை. ஏனெனில் இவர் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் இவரது செயல்பாட்டை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் யாரும் நெருங்க முடியாது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருவதால் இவர் எந்த … Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

மலேசியாவில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் தற்காலிகமாக அகற்றப்படும் என்றும் அதன் மூலம் உள்நாட்டு பயணங்கள் எளிமையாக இருக்கும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இருப்பினும், COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெருநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டில் விருந்தினர்கள் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் … Read more

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை – விஞ்ஞானிகள்

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை - விஞ்ஞானிகள்

இந்தோனேசியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது.  நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் என்பதைக் கணிக்க முடியாமல் இந்தோனேசிய விஞ்ஞானிகள் திணறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,525 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது, இந்தோனேசியாவில் 100,303 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4,838ஆக உள்ளது. 58,173 பேர் உடல்நலம் தேறியுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 45 விழுக்காட்டினர் கிழக்கு ஜாவா, தலைநகர் ஜக்கர்த்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். அந்த இரண்டு … Read more

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரங்களில் சீனா முதலிடம்

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரங்களில் சீனா முதலிடம்

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் 20 நகரங்களில் 18 சீனாவைச் சேர்ந்தவை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் தொழில்நுட்ப இணையப்பக்கம் Comparitech அந்த ஆய்வை நடத்தியது. ஒரு நகரத்தில் அதிக அளவு கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதால் அங்கு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்குச் சான்றுகள் இல்லை என்று விளக்கியது. 2017இல் சீனாவின் தேசிய கண்காணிப்புக் கேமரா கட்டமைப்பில் சுமார் 20 மில்லியன் கேமராக்கள் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது, இவ்வாண்டு அந்த … Read more

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்கள், வளாகத்தைவிட்டு வெளியேற மும்முரமாய்த் தயாராகி வருகின்றனர். சீன நேரப்படி இன்று காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வளாகத்தைக் காலி செய்தாகவேண்டும். காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் பெரிய வாகனங்கள் துணைத் தூதரகத்திற்குள் சென்று வந்த வண்ணம் உள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ,இடையிலான உறவில் … Read more