முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

அமெரிக்கா, கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக செய்த அதன் முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டும் Moderna நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை வழங்குகிறது. இறுதிகட்ட பரிசோதனைகளைத் தொடங்கவிருக்கும் Moderna நிறுவனத்துக்கு இதற்குமுன் 483 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் மேல் 472 மில்லியன் டாலரை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்தவிருக்கும் Moderna நிறுவனம், … Read more

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது. மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது. கேப்டன் … Read more

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று

வடகொரியாவில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அங்கு முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே எல்லைகள் அனைத்தையும் மூடியதோடு, சர்வதேச பயணிகளுக்கு தடை விதித்ததால் இது சாத்தியமானதாக வடகொரியா கூறியது. வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் … Read more

அமெரிக்காவை தாக்கிய புயல்

அமெரிக்காவை தாக்கிய புயல்

ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. புயலை தொடர்ந்து டெக்சாசின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன … Read more

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை வங்காள தேசபிரதமருடன் இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது. ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன. காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வங்காள தேசத்தின் சுருக்கமான … Read more

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு, கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றி, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார். இந்த நாள் (ஜூலை 26-ந் தேதி), கார்கில் போர் வெற்றி நாள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், கார்கிலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. எந்த சூழ்நிலையில் கார்கில் போர் நடந்தது என்பதை இந்தியர்களால் மறக்க முடியாது. … Read more

கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas அதன் போயிங் 747 ரக விமானத்தின் கடைசிப் பயணத்தைச் சென்ற வாரம் புதன்கிழமையன்று இனிதே நடத்தி முடித்தது. நிறுவனத்தின் சின்னமாகிய கங்காரு வடிவத்தை ஆகாயத்தில் அமைத்தவாறு பறந்தது அந்த விமானம். அந்த அதிசய சாகசத்தைக் காண மக்கள் சிட்னி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். கொரோனா கிருமிப்பரவலால் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால், Qantas நிறுவனத்தின் 747 ரக விமானங்கள் திட்டமிட்டதற்கு 6 மாதம் முன்னதாகவே ஓய்வுபெற்றுள்ளன. இரண்டாம் எலிசபெத் அரசியார் … Read more

பூடான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா

பூடான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானிலும் சீனா, தனது வழக்கமான  வேலையை காட்டியுள்ளது.    பூடானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டும் பணியில் பூடான் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, சக்தேங் சரணாலயத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி பூடானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டை பூடான் மிக கடுமையாக எதிர்த்துள்ளது. பூடானும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள 1984- … Read more

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளை கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் படிப்படியாக காட்டி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உள்ளது. கொரோனா பாதிப்பால் 1,426 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புடன் 23,921-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.