கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். அதிபர் போல்சனேரோவுக்கு … Read more

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும்  சூழலில்,  பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை … Read more

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து, “அயோத்தியில் ராமர் கோவில் பூமி … Read more

ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கான அடுத்த இலவசத் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Pugazhendhi Meet CM Edappadi Palaniswami-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முககவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் ஆரம்ப கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முககவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரேஷன் கடைகளில் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் … Read more

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்ஆன ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (26-ம் தேதி)  11 … Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில் தென் கொரியாவில் நேற்று புதிதாக 113 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதங்களில் பதிவான  அதிக எண்ணிக்கை இதுவாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 86 பேர், வெளிநாடுகளிலிருந்து தென் கொரியா சென்றவர்கள். ஈராக்கிலிருந்து தாயகம் திரும்புவோரும், புசான் நகரில் கரையொதுங்கிய ரஷ்ய மீன் பிடிப் படகைச் சேர்ந்த கடலோடிகளும் அவர்களில் அடங்குவர். பயணிகள், கொரோனா கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் … Read more

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம்  இந்தியாவில் அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால்  பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில்  நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் … Read more

கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், இன்று புதிதாக 350க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 5 பேர் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். விக்டோரியா மாநிலம், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது. இரண்டு வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து அங்கு, மூன்றிலக்க எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. விக்டோரியா மாநிலத்தில்  இறந்தவர்களின்  எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த மாநிலத் தலைமைச் சுகாதார அதிகாரி எச்சரித்தார். அருகில் உள்ள நியூ சவுத் … Read more