“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ) ஊரடங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மூதாட்டி ஒருவர் கொரோனாவை பற்றி பேசிய நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு தீவிரமான கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை விட புதுவையில் கொரோனா பாதிப்பு மிக குறைவு. இதுவரை அங்கு 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக … Read more

சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார். இதைப் … Read more

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு புதுவையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் பல்வேறு தொழிலைச் சார்ந்த வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், மீனவர்கள், சில்லறை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பில் வருமானத்தை ஈட்டிவந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கக் கூடும் ஆகவே அவர்களுக்கு நிவாரணம் … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!! புதுச்சேரி: ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி “உலக மகளிர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி வித்தியாசமான செயலை செய்து பொதுமக்களை ஈர்த்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலை பார்க்கும் பெண் ‘துப்புரவு பணியாளர்கள்’ அனைவரையும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெறும் வெற்றியை பெற்ற “திரெளபதி’ திரைப்படத்திற்கு அனுப்பியுள்ளார். இதை மகளிர் தினச் சிறப்பாக … Read more

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!! பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களுடன் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வில் 8,32,000 பேர் எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 3016 தேர்வு மையங்கள் சரியான விதிமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகள் நடவாமல் இருக்க 4000 பறக்கும்படையினர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் தேர்வுக்கு சம்பந்தமில்லாத … Read more

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!!

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!! புதுச்சேரி கடற்கரை சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்கிங் சென்ற அமைச்சரின் செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் உடல் ஆரோக்கியத்திற்காக இரவு நேரங்களில் வாக்கிங் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல இரவு நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். திடீரென அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த செல்போனை இருசக்கர … Read more

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!! புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சிறப்பிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வர இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான வாகன ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் பொதுமக்கள் சாலையை சரியாக பயன்படுத்து அறிவுறுத்தல், அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்பை உறுதி செய்யும்படி செயல்பட்டனர். நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியை அடைந்து, பின்னர் … Read more

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!! புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை … Read more

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!! புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வயதான ஒருவரை காயத்துடன் சாலை ஓரமாக இறக்கி விட்டதாக, புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து மோகன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சம்பவ இடத்தில் ஒரு பெரியவர் உடலில் காயங்களுடன் சோர்ந்து பேசமுடியாத அளவிற்கு உட்கார்ந்திருந்தார். இதனை கண்ட காவலர் மோகன் அவரிடம் விசாரிக்க … Read more

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!! திரெளபதி படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை தனது பேட்டியின் மூலம் விளக்கமளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் நாடக காதலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களமே திரெளபதி படம் என்று … Read more