தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்கான விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. இதற்கு நடுவிலே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து அந்த விழாவிற்கு தலைமை … Read more

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!! பாஜக கட்சியின் முப்பெரும் விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் கையெழுத்து போராட்டத்தை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து சில நாட்களில் 2 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தான் எதிர்பார்த்ததை … Read more

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

ADMK PMK BJP Alliance

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா? நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி … Read more