அமெரிக்காவை மிரட்டி வரும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது

நான் இந்தியாவை அதிகம் நேசிக்கும் நபராக உள்ளேன்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக விளங்கி வருகிறார். அதேபோல் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு அவரது குடும்பத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் நபர் அவரது மகள் இவாங்கா டிரம்ப் ஆவார். இந்தநிலையில் தானும், தனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை … Read more

இந்தியர்கள் பற்றி அமெரிக்க பிரதமர் இப்படி கூறலாமா?

அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ரிச்சர்ட்  நிக்சன் வெள்ளை மாளிகையின் தலைவர் எச்.ஆர். ஹால்டேமன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இந்திய பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இனரீதியாக இந்தியர்களை அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. உடல் ரீதியாகவும் இந்தியர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியர்களை … Read more

அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கடந்த  வார … Read more

எந்த விதத்திலும் இனி டிரம்பை நம்புவது அவசியமில்லை

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் … Read more

அமெரிக்காவில் படகு அணிவகுப்பால் நிகழ்ந்த விபரிதம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து டெக்சாஸ் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் படகு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தனர். டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினுக்கு அருகில் உள்ள டிராவிஸ் ஏரியில் நேற்று இந்த அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்று படகுகளை உற்சாகத்துடன் செலுத்தினர். அப்போது பல்வேறு படகுகள் … Read more

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உருவிளைவிப்பவை என்று இந்திய அரசு கூறியது. அமெரிக்க வெளியுறவுத்துறை 5 ஜி தூய்மையான வலையமைப்பு  திட்டத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் தனது தயாரிக்கப்பட்ட தூய்மையான நெட்வொர்க் திட்டத்தை சீனத் தயாரிக்கப்பட்ட செல்போன் பயன்பாடுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி விரிவுபடுத்துவதாகவும், அதே நேரத்தில் “நம்பத்தகாத” சீன செயலிகளை … Read more

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், … Read more

அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்து வருவது கருப்பினத்தவர் மீது போலீஸ்  வெளிப்படுத்தும் வேற்றுமைதான்.  கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் … Read more

கிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா … Read more