ஆயத்துல்லா காமேனிக்கு   பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனிக்கு   பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் பாம்பியோ நீங்கள் காட்டிக்கொடுப்பவர்களைத் தேடுகிறீர்களானால், சீனா உய்குர்களை அழிக்க முற்படுகிறது. அந்த முஸ்லிம்களுக்கு சி.சி.பி.யின் கொடூரமான சிகிச்சைக்காக உங்கள் பொது அழைப்பை எதிர்பார்க்கிறேன். காமேனியின் வெறுப்பு சித்தாந்தத்தை உலகம் நிராகரிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும். ஆபிரகாமின் பிள்ளைகள் – முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் – சமாதான எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறார்கள், அதே நேரத்தில் காமேனி மேலும் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறார். ஐக்கிய அரபு … Read more

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காகப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அணு ஆயுதங்களைப் பெருக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை அமெரிக்காவுக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ பெருக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீன இராணுவம் தனது 200-க்கும் மேற்பட்ட அணு ஆயுதக் களஞ்சியத்தை 10 ஆண்டுகளில் விரிவுபடுத்தவும், அணுசக்தி … Read more

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலைமை வரலாமா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர்

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிரட்லி ஹெலனை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு சுமித் முன்னேறினார். மேலும் அமெரிக்க … Read more

அமெரிக்காவில் மூன்றாம் கட்ட பரிசோதனையா?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. ரஷியா முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தடுப்பூசி ஒன்ற தயாரித்துள்ளது. இதுதான் முதன்முதலாக உலகளவில் வெளியாகும் வெற்றிகரமான தடுப்பூசியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்திடம் தயாரிப்பு உரிமை பெற்ற அந்தந்த நாடுகளில் 3-ம் … Read more

ரசிகர்கள் இன்றி அரங்கேறிய அமெரிக்க ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் … Read more

கலவர பூமியான அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லேண்ட் நகரில் கடந்த மூன்று வாரங்களாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போர்ட்லேண்ட் நகரில் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் அங்குள்ள போலீஸ் சங்கம் கட்டிடத்திற்கு தீ … Read more

 தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3-ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது, 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகள், 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அதே சமயத்தில், மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம், 3-ம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையை … Read more

அமெரிக்காவில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பாகிஸ்தான் வம்சாவளியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கமலா ஹாரீஸ் திறமையில்லாதவர். அவரை விட அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று கூறியுள்ளார். நியூஹாம்ஸ்பியரில் … Read more