பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவியில் இருந்தவர் (வயது 70). இவர் மீது 34 ஆண்டு கால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்புகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அந்த வழக்கு லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நீதிபதி ஆசாத் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இல்லை என்ற தகவலை மாதிரிநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது. இதனால் சீன தரப்பு புலம்பி வருகிறது. இதுபற்றி சீன வர்த்தகத்துறை அதிகாரி … Read more

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தித்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் … Read more

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உருவிளைவிப்பவை என்று இந்திய அரசு கூறியது. அமெரிக்க வெளியுறவுத்துறை 5 ஜி தூய்மையான வலையமைப்பு  திட்டத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் தனது தயாரிக்கப்பட்ட தூய்மையான நெட்வொர்க் திட்டத்தை சீனத் தயாரிக்கப்பட்ட செல்போன் பயன்பாடுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி விரிவுபடுத்துவதாகவும், அதே நேரத்தில் “நம்பத்தகாத” சீன செயலிகளை … Read more

நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது  என்று ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார். எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவது கால அட்டவணையில் இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எஸ் -400 விநியோகத்தை பாதிக்காது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய ஆதரவு உட்பட சில மிகப் பெரிய அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். … Read more

இந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த  கவலை அளிக்கிறது

இந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த  கவலை அளிக்கிறது

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் பப்ஜி, … Read more

சீனாவில் களைகட்டிய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

சீனாவில் களைகட்டிய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

ஜப்பானை போரில் வீழ்த்தி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.  இதனையொட்டி ஜப்பானை போரில் வீழ்த்தியதற்கான பவள விழா கொண்டாட்டம் சீனாவில் களைகட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் பீஜி​ங்கில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. சீன அதிபர் ஜின்பிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.  இந்த கொண்டாட்டத்தில், நாட்டின் மிக மூத்த தலைவர்களும், தியாகிகளும் கலந்து கொண்டனர்.  போர் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து உரிய மரியாதையும் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா வைரசானது … Read more

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்ஸிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்று சந்திரன் அதன் மீதும் துருபிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் விஞ்ஞானிகள் கண்டுஆச்சரியப்பட்டனர்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திரயான் -1 சுற்றுப்பாதையில் இருந்து தரவை மதிப்பாய்வு செய்து சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சந்திராயன் 2008 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் போது நீர் பனியைக் கண்டுபிடித்து … Read more

வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி

வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீல எல்லையா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து வேலை செய்தார். இந்த நிலையில் அவர் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே அமீரக அரசு கடந்த மே 18-ந் தேதி அளித்த பொதுமன்னிப்பில் விசா மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்தது. தற்போது … Read more