இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

0
60

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா வைரசானது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.  அந்நாட்டில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி மக்கள் நடந்து கொண்ட சூழலில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அந்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,120 ஆக இருந்தது.    இவற்றில் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 388 பேருக்கும், காத்மண்டு மாவட்டத்தில் 350 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால், நேபாளத்தில் கொரோனா பாதிப்பு 41,649 ஆக உயர்ந்தது.
author avatar
Parthipan K