தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?

 தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3-ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது, 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகள், 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அதே சமயத்தில், மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம், 3-ம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையை … Read more

அமெரிக்காவில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான்

அமெரிக்காவில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பாகிஸ்தான் வம்சாவளியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

கொரோனாவில் இருந்து குணமானவர்கள் இந்த தீவிற்கு செல்லலாம்

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்  அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.  பிரேசிலில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டு எல்லைகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.  தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தீவு ஒன்றையும் பிரேசில் அடுத்த வாரம் திறக்க உள்ளது. பெர்னண்டோ டி நோரோன்ஹா என்ற தீவு மிக அழகிய இடங்களை … Read more

இந்த நாட்டில் வரலாறு காணாத மழை?

இந்த நாட்டில் வரலாறு காணாத மழை?

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றுகளால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் முதல் பாதிப்பு அறியப்பட்ட பின்னர் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது தவிர்த்து ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளிலும் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.  அந்நாட்டின் கராச்சி நகரில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 89 ஆண்டுகளில் … Read more

அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கமலா ஹாரீஸ் திறமையில்லாதவர். அவரை விட அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று கூறியுள்ளார். நியூஹாம்ஸ்பியரில் … Read more

மீண்டும் அதிபராக இவருக்கே வாய்ப்பு அதிகம்

மீண்டும் அதிபராக இவருக்கே வாய்ப்பு அதிகம்

குடியரசு கட்சி மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. தி ஹில் நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய அளவில் ஜோ பிடனின் முன்னணியானது சற்று குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜோ பிடன், 50 சதவிகித வாக்காளர்களின் ஆதரவோடு முன்னிலை வகித்தார். டிரம்பிற்கு 44 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு அளித்தனர். குடியரசுக் கட்சி மாநாட்டைத் தொடங்குவதற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 23) நடந்த வாக்கெடுப்பில் … Read more

இந்த நாட்டில் இந்த ஆண்டு இறுதிவரை வருவதற்கு தடை

இந்த நாட்டில் இந்த ஆண்டு இறுதிவரை வருவதற்கு தடை

மலேசிய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் முஹைதீன் யாசின் கட்டுப்பாடுகள் குறித்து கூறியதாவது: “உலகின் பிற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது. இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன” என்றார்.

கொரோனா பற்றி சுவாரிசியமான தகவல்

கொரோனா பற்றி சுவாரிசியமான தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன. இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, … Read more

கொலம்பியாவில் இருபது ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

கொலம்பியாவில் இருபது ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. கொலம்பியாவில் ஒரே நாளில் 9,394 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 … Read more

கொரோனாவால் ரஷ்யாவில் இத்தனை ஆயிரம் பேர் பலியா?

கொரோனாவால் ரஷ்யாவில் இத்தனை ஆயிரம் பேர் பலியா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் … Read more