மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் … Read more

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ … Read more

அதிர்ச்சி தகவல் : ஒரே நாளில் 7424 பேருக்கு கொரோனா உறுதி

அதிர்ச்சி தகவல் : ஒரே நாளில் 7424 பேருக்கு கொரோனா உறுதி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 197395 பேர் இதுவரை இறந்துள்ளனர். அடுத்தாக இந்தியாவில் 77506 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 702088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 7,424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொலம்பியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை  22518  ஆக உயர்ந்துள்ளது.  

ராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து

ராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது. இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் … Read more

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என … Read more

முன்னாள் பிரதமர் பிரகடனப்படுத்திய குற்றவாளியா?

முன்னாள் பிரதமர் பிரகடனப்படுத்திய குற்றவாளியா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  பிரகடனப்படுத்திய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் வேண்டுமென்றே சட்டத்தின் செயல்பாட்டில் இருந்து தன்னை தவிர்ப்பது, தப்பி ஓடுவது, மறைப்பது என்று நடந்து கொண்டிருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்” என கூறினார். மேலும் நவாஸ் ஷெரீப் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் … Read more

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (65,88,448 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (45,66,726 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (42,39,763 பேர்) உள்ளன.

கொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

கொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

பெலாரஸ் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உக்ரேனுக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் எனது தலைக்கு மேல் ஒரு பையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வியாழக்கிழமை அவரது வழக்கறிஞர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலாரசில் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மறுதேர்தலுக்கு எதிராக நடைபெற்ற  ஒரு மாத கால போராட்டங்களில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான கோல்ஸ்னிகோவாவை நாடுகடத்தும் முயற்சி டைபெற்றது. அவர் தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து வெளியேற்றும் முயற்சியைத் தடுத்தார். நாடுகடத்தப்படுவதில் தோல்வியுற்றபோது தனது … Read more

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி … Read more

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து … Read more