படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

Photo of author

By Divya

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

அதிக நேரம் உடல் உழைத்தால் வியர்வை சுரப்பியில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். கோடை காலத்திலும் அதிகளவு வியர்வை சுரக்கும். இவ்வாறு உடலில் அதிகம் வியர்வை சுரந்தால் அவை தோலில் பூஞ்சைகளை உருவாக்கும்.

இந்த பூஞ்சை நாளடைவில் படர்தாமரையாக மாறிவிடுகிறது. படர்தாமரை அதிக எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது.

இந்த படர்தாமரையால் பொது இடங்களில் பல சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். படர்தாமரைக்கு நிரந்த தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

1)பூவரசு இலை
2)எலுமிச்சை சாறு
3)சந்தனம்

தேவையான அளவு பூவரசு இலை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்த 1 மணி நேரத்திற்கு பின்னர் எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை வைத்து தேய்த்து பேஸ்ட்டாக மாற்றி அதை படர்தாமரை உள்ள இடத்தில் பற்று போல் போடவும். இவ்வாறு செய்து வந்தால் படர்தாமரைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.