அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

0
70

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தின் படி எந்த விதமான நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை.

சட்டசபை கூட்டம் தொடங்கிய முதல் நாளில் பன்னீர் செல்வத்தையும் ஆதரவாளர்கள் மட்டுமே சட்டசபைக்கு வருகை தந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அன்றைய தினம் சட்டசபைக்கு வருகைதராமல் புறக்கணித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பழனிச்சாமி திறப்பினர் பங்கேற்றுக் கொண்டனர் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய கடிதத்தின் பெயரில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஆகவே எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இது தொடர்பாக சட்டசபையில் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது தொடர்பாக பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலில் ஈடுபட்ட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பிறகு மேற்கொண்டு நேற்றைய அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாகும் என்று தெரிவித்து காவல்துறையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் செய்ய வரும் அதிமுகவினரை கைது செய்ய காவல்துறையினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.