பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

0
135
#image_title

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

குளிர் காலத்தில் பாத அழகை கெடுக்கும் பாத வெடிப்புகள் அதிகம் உருவாகும். இந்த வெடிப்புகளை குணமாக்கும் சிம்பிள் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பயன்பெறவும்.

தீர்வு 01:-

*மஞ்சள் தூள்
*தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் உங்கள் பாத வெடிப்புக்கு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை பாதத்தில் வெடிப்பில் உள்ள பகுதியில் பூசி வர அவை சில தினங்களில் மறையும்.

தீர்வு 02:-

*வெந்நீர்
*கல் உப்பு

ஒரு அகலமான பாக்கெட்டில் கால் பொறுக்கும் அளவில் வெந்நீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து விடவும்.

இந்த நீரில் பாதத்தை வைத்து சுத்தம் செய்யவும். இதை இரவு நேரத்தில் செய்வது நல்லது. இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.

தீர்வு 03:-

*எலுமிச்சை தோல்
*தேங்காய் எண்ணெய்

பாதத்தை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு வெடிப்பின் மீது தேங்காய் எண்ணெய் பூசி எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து விடவும். இவ்வாறு செய்வதினால் வெடிப்பு விரைவில் மறையும்.

தீர்வு 04:-

*தக்காளி

தக்காளியில் சிறிது உப்பு சேர்த்து பாத வெடிப்பில் தேய்த்து வர அவை விரைவில் மறையும்.

தீர்வு 05:-

*உருளைக்கிழங்கு
*மஞ்சள்

ஒரு உருளைகிழங்கை அரைத்து சாறு எடுத்து அதில் மஞ்சள் கலந்து பாத வெடிப்பில் தடவி வர விரைவில் தீர்வு கிடைக்கும்.